ஷா ஆலாம், ஏப்ரல் 1 – குடிபோதை ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தனது கணவர் அமிருல் ஹபீஸ் ஓமரின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவரது மனைவி நீதிகோரியுள்ளார்.
சோகம் தாளாத நிலையில் பேசிய திருமதி நூர் நாடியா, தனது கணவரின் உயிருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
"எனக்கு உயிருக்கு உயிர்தான் வேண்டும்," என்று இன்று காலை சுமார் 9.20 மணியளவில் கிள்ளான் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிள்ளான், ஜாலான் ராயா பாராட் பகுதியில் மது மற்றும் போதைப் பொருள் உட்கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் ஓட்டிவந்த கார் மோதியதில் அமிருல் ஹபீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் லிம் ஜிட் ஹுய் கூறுகையில், காலை 11.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தார். 20 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவர் ஓட்டிவந்த ஹோண்டா சிட்டி கார், ஜாலான் ராயா பாராட் பகுதியிலிருந்து கிள்ளான் நகரை நோக்கி அதிவேகமாகச் சென்றபோது விபத்து நேரிட்டது.
"நடத்தப்பட்ட சோதனையில், அந்தக் கார் ஓட்டுநர் மது அருந்தியிருந்ததும், போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது," என்று அவர் கூறினார்.
சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்று முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ttps://mediaselangor.com/ms/2026/04/350124
தனது கணவரின் மரணத்திற்கு காரணமான குடிபோதை ஓட்டுநருக்கு மரண தண்டனை விதிக்கப் வேண்டும் -என்கிறார் மனைவி
1 ஏப்ரல் 2026, 3:51 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ராக்கி வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம்: ஆடவர் மீது வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
கிள்ளான் ஆற்றில் இந்தோனேசியப் பெண்ணின் சடலம் மீட்பு; போலீஸ் விசாரணை
Shalini Rajamogun
5 ஆகஸ்ட் 2026

national
தவறுதலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் பலகாரக் கடையில் கார் மோதி விபத்து
Shalini Rajamogun
5 ஆகஸ்ட் 2026

selangor
பெட்டாலிங், கிள்ளான் மாவட்டங்களில் டிங்கி பாதிப்புகள் தொடர்ந்து உயர்வு
Adam Azman
4 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



