மேலும் 5 புதிய எல்ஆர்டி 3 நிலையங்கள் கட்டப்படும்

29 ஜூன் 2026, 2:46 AM
மேலும் 5 புதிய  எல்ஆர்டி 3 நிலையங்கள் கட்டப்படும்

கிள்ளான், ஜூன் 29 - கிள்ளான் பள்ளத்தாக்கின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த எல்ஆர்டி 3 வழித்தடத்தில் ஐந்து புதிய நிலையங்கள் இந்த ஆண்டு இறுதியில் கட்டப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

துரோபிகானா, ராஜா மூடா, தெமாஸ்யா, புக்கிட் ராஜா மற்றும் பண்டார் பொத்தானிக் ஆகிய இந்த ஐந்து கூடுதல் நிலையங்களும் ஷா ஆலாம் வழித்தடத்தின் போக்குவரத்து இயக்கத்தை முழுமையாக்கும்.

தேவையான ஒப்புதல்கள் வழங்கப்பட்ட பிறகு, இந்த ஐந்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைப்பதன் மூலம் ரயில்களின் வருகை நேர இடைவெளி மேலும் குறைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.