கோலாலம்பூர், நவ.28 – சிலாங்கூர், பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் சரவாக் ஆகிய ஏழு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசமும் இந்த எச்சரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் பெட்டாலிங், செப்பாங், உலு சிலாங்கூர், சபாக் பெர்னாம், கிள்ளான், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.






