ஷா ஆலாம், நவ. 26: சிலாங்கூரின் உலு சிலாங்கூர் மாவட்டம் உட்பட நாட்டின் ஏழு மாநிலங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையில், கெடா, பினாங்கு, பேராக், பகாங், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த வானிலை எச்சரிக்கை இன்று மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.
எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





