சிலாங்கூரின் 7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா

24 நவம்பர் 2026, 7:08 AM
சிலாங்கூரின் 7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா

ஷா ஆலாம், நவ.24 – சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை கோலா லங்காட், செப்பாங், உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

சிலாங்கூரைத் தவிர பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபாவின் சில பகுதிகளுக்கும், கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் கூட்டரசுப் பிரதேசங்களுக்கும் இதேபோன்ற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும்போது அல்லது இத்தகைய வானிலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும்போது இந்த எச்சரிக்கை வெளியிடப்படுவதாக மெட்மலேசியா தெரிவித்தது.

மேலும், ஒவ்வொரு எச்சரிக்கையும் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை நிலவரங்களைக் கண்காணிப்பதுடன், கனமழை மற்றும் பலத்த காற்றின்போது தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.