சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை எச்சரிக்கை

28 நவம்பர் 2026, 8:30 AM
சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை எச்சரிக்கை

ஷா ஆலாம், நவ.28 – சிலாங்கூரின் கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங் மற்றும் செப்பாங் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளையில், கோலாலம்பூர், புத்ராஜெயா, பகாங், நெகிரி செம்பிலான், சரவாக் ஆகிய மாநிலங்களிலும் மோசமான வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கைகள் குறுகிய காலத்திற்கானவை என்றும், அவற்றின் செல்லுபடிக் காலம் அதிகபட்சம் ஆறு மணி நேரமாகும் என்றும் அத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.