சிலாங்கூரின் 6 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: மெட்மலேசியா எச்சரிக்கை

27 நவம்பர் 2026, 7:32 AM
சிலாங்கூரின் 6 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: மெட்மலேசியா எச்சரிக்கை

ஷா ஆலாம், நவ.27 – சிலாங்கூரின் ஆறு மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட், கோலா லங்காட் மற்றும் செப்பாங் ஆகிய மாவட்டங்களுக்குப் பொருந்தும்.

இந்த வானிலை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனுடன், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் சபா மாநிலங்களின் பல பகுதிகளிலும் இதே வானிலை நிலவக்கூடும்.

இத்தகைய எச்சரிக்கைகள் குறுகிய கால முன்னறிவிப்புகளாகும். ஒவ்வொரு எச்சரிக்கையும் அதிகபட்சம் ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.

எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.