சிலாங்கூர் வெள்ளம்: 798 பேர் இன்னும் 4 நிவாரண மையங்களில் தஞ்சம்

28 நவம்பர் 2026, 3:32 AM
சிலாங்கூர் வெள்ளம்: 798 பேர் இன்னும் 4 நிவாரண மையங்களில் தஞ்சம்
சிலாங்கூர் வெள்ளம்: 798 பேர் இன்னும் 4 நிவாரண மையங்களில் தஞ்சம்
சிலாங்கூர் வெள்ளம்: 798 பேர் இன்னும் 4 நிவாரண மையங்களில் தஞ்சம்

ஷா ஆலாம், நவ.28 – சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 798 பேராகக் குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 247 குடும்பங்கள் நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறையின் (JKM) பேரிடர் தகவல் இணையத் தளத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நேற்று 829 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

கோலா லங்காட் மாவட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மூன்று நிவாரண மையங்களில் 235 குடும்பங்களைச் சேர்ந்த 757 பேர் தங்கியுள்ளனர். குறிப்பாக, SK RTB புக்கிட் சாங்காங் பள்ளியில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 735 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும், கம்போங் லபோஹான் டாகாங் பொதுமக்கள் மண்டபத்தில் ஆறு பேரும், கம்போங் சுங்கை கெலும்பு சமூக மண்டபத்தில் 16 பேரும் தங்கியுள்ளனர்.

இதற்கிடையில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள பத்து 8 இஜோக் சமயப் பள்ளி நிவாரண மையத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிவாரணப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.