சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,370-ஆகக் குறைந்தது

24 நவம்பர் 2026, 2:46 AM
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,370-ஆகக் குறைந்தது

ஷா ஆலாம், நவ.24 – சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை 1,594 பேரிலிருந்து 1,370 பேராகக் குறைந்துள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கோலா சிலாங்கூர் மற்றும் கோலா லங்காட் ஆகிய இரண்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஒன்பது நிவாரண மையங்களில் 392 குடும்பங்களைச் சேர்ந்த 1,370 பேர் தங்கியுள்ளதாக சமூக நலத்துறையின் (JKM) InfoBencana தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள எட்டு நிவாரண மையங்களில் 1,354 பேர் தங்கியுள்ளனர். கோலா லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

கோலா சிலாங்கூரில் SK டத்தோ மஹாராஜா லேலா பள்ளி நிவாரண மையத்தில் அதிகபட்சமாக 385 பேரும், SK பாரிட் மாஹாங் மையத்தில் 274 பேரும் தங்கியுள்ளனர். பிற நிவாரண மையங்களில் 46 முதல் 219 பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கோலா லங்காட்டின் கம்போங் சுங்கை கெலும்பு மக்கள் மண்டப நிவாரண மையத்தில் 16 பேர் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, 12 நிவாரண மையங்களில் 448 குடும்பங்களைச் சேர்ந்த 1,594 பேர் தங்கியிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 224 பேரால் குறைந்துள்ளது. அதேவேளையில், செயல்படும் நிவாரண மையங்களின் எண்ணிக்கையும் 12 இலிருந்து ஒன்பதாகக் குறைந்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.