SEA 2027 விளையாட்டுப் போட்டியில் கூடுதல் விளையாட்டுகளைச் சேர்க்க மலேசியா தயார்

28 நவம்பர் 2026, 3:03 AM
SEA 2027 விளையாட்டுப் போட்டியில் கூடுதல் விளையாட்டுகளைச் சேர்க்க மலேசியா தயார்

ஷா ஆலாம், நவ.28 – 2027-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (SEA Games) கூடுதல் விளையாட்டு நிகழ்வுகளைச் சேர்ப்பதற்கு மலேசியா ஆதரவளிக்கும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழியும் மேலும் இரண்டு அல்லது மூன்று விளையாட்டு வகைகளை இணைப்பதில் மலேசியாவுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அண்மையில் தம்மைச் சந்தித்தபோது, 2027-ஆம் ஆண்டு SEA விளையாட்டுப் போட்டிகளில் கூடுதல் விளையாட்டு வகைகளைச் சேர்ப்பது தொடர்பில் கோரிக்கை முன்வைத்ததாக அன்வார் தெரிவித்தார்.

தென்கிழக்காசிய நாடுகள் தங்களின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த மலேசியா தயாராக இருப்பதாகவும், இருப்பினும் புதிய விளையாட்டுகளை இணைப்பதற்கான இறுதி முடிவு தென்கிழக்காசிய விளையாட்டுக் கூட்டமைப்பின் (SEAGF) ஒப்புதல் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிலாங்கூரில் உள்ள செப்பாங் அனைத்துலகப் பந்தயத் திடலில் (SIC) இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான விளையாட்டு தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமட் தௌஃபிக் ஜொஹாரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.