2027 சீ விளையாட்டு : விளையாட்டு அரங்குகளை வழங்க சிலாங்கூர் அரசு தயார்

31 அக்டோபர் 2026, 4:04 AM
2027 சீ விளையாட்டு : விளையாட்டு அரங்குகளை வழங்க சிலாங்கூர் அரசு தயார்
2027 சீ விளையாட்டு : விளையாட்டு அரங்குகளை வழங்க சிலாங்கூர் அரசு தயார்
2027 சீ விளையாட்டு : விளையாட்டு அரங்குகளை வழங்க சிலாங்கூர் அரசு தயார்

ஷா ஆலாம், அக் 31 - 2027 தென்கிழக்காசிய சீ விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தனக்குச் சொந்தமான ஹாக்கி மைதானம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகளைப் பயிற்சிக்காக வழங்க சிலாங்கூர் மாநில அரசாங்கம் தயாராக உள்ளது.

இம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், தேசிய விளையாட்டு மன்றத்துடன் (MSN) இணைந்து செயல்பட சிலாங்கூர் அரசாங்கம் தயாராக இருப்பதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அத்துடன், பயிற்சிகளுக்குப் பொருத்தமான இதர இடங்களையும் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடற்கரை கைப்பந்து (Beach Volleyball) மற்றும் பந்துவீச்சு (Bowling) போன்ற அனைத்துலகத் தரம் வாய்ந்த போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் சிலாங்கூருக்கு உள்ளதால், இந்த வசதிகள் அனைத்தும் விளையாட்டுப் போட்டிகளின் ஆயத்தப் பணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

22-வது மலேசிய விளையாட்டுப் போட்டி (சுக்மா) மற்றும் பாரா சுக்மா போட்டியின் பாராட்டு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமிருடின் ஷாரி, "இம்முறை சீ விளையாட்டுப் போட்டி கோலாலம்பூர், சரவாக், ஜொகூர் மற்றும் பினாங்கு ஆகிய நான்கு முக்கியப் பகுதிகளில் அதிகாரப்பூர்வமாக நடைபெறவுள்ளன.

இருப்பினும், தேசிய விளையாட்டு மன்றம் விரும்பினால் எங்களுடைய விளையாட்டு அரங்குகளைப் பயிற்சிக்காகத் திறந்துவிட நாங்கள் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.

இதனிடையே, 2027 சீ விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 43 விளையாட்டுகளின் கீழ் 473 போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின்(OCM) துணைத் தலைவர் டத்தோ நூர் அஸ்மி அகமட் தெரிவித்துள்ளார்.

அப்போட்டி அடுத்தாண்டு செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 29 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.