ஷா ஆலாம், நவ.14: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவின் மேற்குக் கடற்பகுதியில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்குச் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தெரிவித்தது.
இந்தோனேசியாவின் சிமியூலு தீவிலிருந்து மேற்கே சுமார் 364 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது.







