ஆர்டிக் பொது பூப்பந்து போட்டி: ஆரோன் – ராய் கிங் ஜோடி அபார வெற்றி

12 அக்டோபர் 2026, 3:03 AM
ஆர்டிக் பொது பூப்பந்து போட்டி: ஆரோன் – ராய் கிங் ஜோடி அபார வெற்றி

கோலாலம்பூர், அக்.12: மலேசியாவின் தற்காலிக ஆடவர் இரட்டையர் பூப்பந்து ஜோடியான ஆரோன் டாய் – ராய் கிங், பின்லாந்தில் நடைபெற்ற ஆர்டிக் பொது போட்டியில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

முதல்முறையாக இணைந்து களமிறங்கிய ஆரோன் டாய் – ராய் கிங் ஜோடி, இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 60ஆவது இடத்தில் உள்ள தைவானின் லாய் போ யூ – சாய் ஃபூ செங் ஜோடியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றியது. இரு செட்களிலும் நிதானத்துடன் விளையாடிய அவர்கள், 41 நிமிடங்களில் வெற்றியை உறுதிசெய்து தங்களது முதல் பட்டத்தை வென்றனர்.

ஆரோன் டாய் மற்றும் ராய் கிங் இருவரும் இதற்கு முன்னர் தனித்தனியான நிரந்தர இணைகளுடன் விளையாடி வந்தனர். ஆரோன் டாய், காங் காய் சிங் உடனும், ராய் கிங், வான் அரிஃப் ஜுனைதியுடன் இணைந்தும் போட்டிகளில் பங்கேற்று வந்தனர்.

இந்நிலையில், மலேசிய ஆடவர் இரட்டையர் பிரிவின் தலைமைப் பயிற்றுநர் ஹெர்ரி இமான் பியர்ங்காடி மேற்கொண்ட இணை மாற்றப் நடவடிக்கையில் இருவரும் தற்காலிகமாக இணைக்கப்பட்டனர்.

உலக தொடரில் முதல்முறையாக இணைந்து விளையாடியபோதே வெற்றியாளர் பட்டத்தை வென்றிருப்பது, பயிற்றுநரின் இந்தப் புதிய முயற்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. புதிய இணையாகக் களமிறங்கியிருந்தாலும், சர்வதேச அரங்கில் போட்டியிட்டு பட்டம் வெல்லும் திறன் தங்களிடம் இருப்பதை இருவரும் நிரூபித்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் 39,500 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையையும் அவர்கள் தட்டிச் சென்றனர். இது மலேசிய நாணய மதிப்பில் சுமார் 1,41,460 ரிங்கிட்டுக்குச் சமமாகும்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.