சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: மெட்மலேசியா எச்சரிக்கை

20 நவம்பர் 2026, 7:26 AM
சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: மெட்மலேசியா எச்சரிக்கை

ஷா ஆலாம், நவ.20 – சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான், பெட்டாலிங், கோலா சிலாங்கூர் மற்றும் கோம்பாக் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலாங்கூர் மட்டுமின்றி கோலாலம்பூர், திரங்கானு, ஜோகூர், சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் சில பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் வாய்ப்புள்ளதால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

மேலும், இத்தகைய எச்சரிக்கைகள் குறுகிய கால முன்னறிவிப்புகளாகும். ஒவ்வொரு எச்சரிக்கையும் அதிகபட்சம் ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.

எனவே, பொதுமக்கள் வானிலை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருப்பதுடன், சமீபத்திய தகவல்களை www.met.gov.my இணையத்தளம், MetMalaysia சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது myCuaca செயலி வாயிலாகத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.