ஷா ஆலாம், நவ.15 – சிலாங்கூர் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூரைத் தவிர கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வானிலை எச்சரிக்கை குறுகிய காலத்திற்கானது என்றும், ஒவ்வொரு முறையும் வெளியிடப்படும் எச்சரிக்கையின் செல்லுபடியாகும் காலம் ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கும் என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





