வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு தலா RM500 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள்

24 நவம்பர் 2026, 3:19 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு தலா RM500 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு தலா RM500 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு தலா RM500 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள்

கோலா சிலாங்கூர், நவ.24: சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் வாங்குவதற்காக, தலா RM500 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக மொத்த RM200,000 செலவிடப்பட்டுள்ளது.

சிலாங்கூர் சுல்தான் அறக்கட்டளை (Yayasan Sultan Selangor-YSS) மற்றும் Segi Fresh நிறுவனம் இணைந்து முன்னெடுத்துள்ள இத்திட்டத்திற்கு இரு தரப்பினரும் தலா RM100,000 நிதி வழங்கியுள்ளனர்.

அண்மையில் கோலா சிலாங்கூரில் உள்ள SK பாரிட் மாஹாங் தற்காலிக நிவாரண மையத்திற்கு வருகை தந்த சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த இந்த உதவியை வழங்கினார்.

இந்தப் பற்றுச்சீட்டுகள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் Segi Fresh பேரங்காடிகளில் மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், சமையல் பொருட்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

வெள்ளநீர் வடிந்த பின்னரும் குடும்பங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான அன்றாடப் பொருட்களை மீண்டும் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக சிலாங்கூர் சுல்தான் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி முகமட் ஷாஸ்வான் முகமட் டாவூட் தெரிவித்தார். இந்த உதவித் திட்டம் அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், Segi Value Holdings Sdn Bhd நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ சுய் ஆ ஹோக், நெருக்கடியான காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலப் பேரிடர் நிர்வாகப் பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இம்முயற்சி, மீட்பு நடவடிக்கைகளில் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.