கோம்பாக்,கிரீன்வுட் பொது நூலகத்தில் பிள்ளைகளுக்கான AI கற்றல் வசதி

21 நவம்பர் 2026, 5:17 AM
கோம்பாக்,கிரீன்வுட் பொது நூலகத்தில் பிள்ளைகளுக்கான AI  கற்றல்  வசதி
கோம்பாக்,கிரீன்வுட் பொது நூலகத்தில் பிள்ளைகளுக்கான AI  கற்றல்  வசதி
கோம்பாக்,கிரீன்வுட் பொது நூலகத்தில் பிள்ளைகளுக்கான AI  கற்றல்  வசதி

கோம்பாக், நவ 21 : கோம்பாக்கில் திறக்கப்பட்டிருக்கும் கிரீன்வுட் சிலாங்கூர் பொது நூலகம் (Perpustakaan Awam Selangor @Greenwood), பிள்ளைகளுக்கு AI செயற்கை நுண்ணறிவின் அடிப்படை அறிவை வழங்கும் இடம் உட்பட, ஊடாடும் வகையிலான நவீன கற்றல் வசதிகளை வழங்குகிறது.

நூலகங்களை வெறும் புத்தகம் படிக்கும் மற்றும் இரவல் வாங்கும் இடமாக மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் கல்வி கற்கும் மையமாக விரிவுபடுத்தும் மாநில அரசாங்கத்தின் முயற்சியை இத்திட்டம் பிரதிபலிப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

17 லட்சம் ரிங்கிட் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த அறிவு மையம் கடந்த ஜூலை மாதம் முதல் செயல்படத் தொடங்கியதாகவும், இது கோம்பாக் மாவட்டத்தில் திறக்கப்பட்ட நான்காவது நூலகம் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று அந்நூலகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் அவர் ஊடகங்களிடம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் (PPAS) இயக்குநர் டத்தின் படுக்கா மஸ்துரா முகமதுவும் உடனிருந்தார்.

கிரீன்வுட் சிலாங்கூர் பொது நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி

நூலகத்தை வாழ்நாள் முழுவதும் கல்வி கற்கும் இடமாக மாற்றுவதே தங்களின் இலக்கு என்றும், பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்கான கல்வி அம்சங்களான அடிப்படை செயற்கை நுண்ணறிவு (AI), நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை இதில் இணைக்க விரும்புவதாகவும் அமிரூடின் ஷாரி கூறினார்.

இதன் மூலம், கற்றல் என்பது பள்ளிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாமல், சமூகத்திற்கு நெருக்கமான நூலகங்கள் போன்ற பொது இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

படம் : மீடியா சிலாங்கூர்

அதே வேளையில், பிள்ளைகள் தங்களது ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க நூலகங்களில் 'டிரான்சிட்' (Transit) எனப்படும் பாதுகாப்பான இடங்களை ஏற்பாடு செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமிருதீன் தெரிவித்தார்.

'அடாப்டிவ் கேரேஜ்'(Adaptive Garage) அமைப்புடன் இணைந்து செயல்படுவதன் மூலம், பிபிஆர் லெம்பா சுபாங் (PPR Lembah Subang) மற்றும் கோத்தா டாமான்சாரா உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் தன்னார்வலர்களின் உதவியுடன் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றாரவர்.

படம் : மீடியா சிலாங்கூர்

வாழ்க்கைத் திறன்களுக்கான ஆரம்பகட்ட அறிமுகமாக முடி வெட்டுதல் மற்றும் நிதி நிர்வகிப்பு போன்ற திறன்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் 105 நூலகங்கள் உள்ளதாகவும், கற்றல் வசதிகளை மக்களிடம் மேலும் விரிவுபடுத்தும் வகையில் அடுத்த ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 120 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.