ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூரின் ஐந்து மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை, பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கோலா லங்காட், செப்பாங் மற்றும் கிள்ளான் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
மேலும், பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், பகாங், நெகிரி செம்பிலான், சபா ஆகிய மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை குறுகிய கால முன்னறிவிப்பாகும். ஒவ்வொரு முறையும் வெளியிடப்படும் எச்சரிக்கை அதிகபட்சம் ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் வானிலை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருப்பதுடன், சமீபத்திய வானிலை அறிவிப்புகளை மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வத் தளங்கள் மூலம் தொடர்ந்து தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






