சிலாங்கூரில் 439 மின்கம்பி திருட்டு சம்பவங்கள்; TNB நிறுவனத்திற்கு RM62.7 மில்லியன் இழப்பு

19 நவம்பர் 2026, 7:09 AM
சிலாங்கூரில் 439 மின்கம்பி திருட்டு சம்பவங்கள்; TNB நிறுவனத்திற்கு RM62.7 மில்லியன் இழப்பு
சிலாங்கூரில் 439 மின்கம்பி திருட்டு சம்பவங்கள்; TNB நிறுவனத்திற்கு RM62.7 மில்லியன் இழப்பு

ஷா ஆலாம், நவ 19 : 2023 ஜனவரி 1 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சிலாங்கூரில் பதிவான 439 மின்கம்பி திருட்டுச் சம்பவங்களால், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திற்கு 62.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாண்டு மட்டும் 166 சம்பவங்கள் பதிவாகிய நிலையில், TNB சொத்துக்கள் சம்பந்தப்பட்ட திருட்டுச் சம்பவங்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உட்கட்டமைப்பு மற்றும் வேளாண்மைத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸ்ஹாம் ஹாஷிம் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தின் கேள்வி-பதில் நேரத்தின்போது ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் ஜெஃப்ரி மிஜான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், செராஸில் அதிகபட்சமாக 45 சம்பவங்களும், அதனைத் தொடர்ந்து பாங்கியில் 37 சம்பவங்களும், கிள்ளான் துறைமுகத்தில் 24 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த எண்ணிக்கை மிகவும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பதிலடியாக அதிக ஆபத்துள்ள மற்றும் அடிக்கடி திருட்டு நடக்கும் இடங்களில் உள்ளூர் குழுக்கள், நியமிக்கப்பட்ட குத்தகையாளர்கள் மற்றும் துணை போலீசார் மூலம் TNB ரோந்துப் பணிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த ரோந்துப் பணிகளின் போது மின்கம்பிகள், மின் விநியோகப் பெட்டிகள், துணை மின்நிலையங்கள் மற்றும் தொடர்புடைய பாகங்களில் அத்துமீறல், சொத்துக்கள் காணாமல் போதல் மற்றும் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இவற்றின் முடிவுகளின் அடிப்படையில் பழுதுபார்த்தல் மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, அதிகாரிகளுடனான ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், திருட்டைத் தடுக்க மின் விநியோகத் தூண்களைச் சுற்றி ஏற முடியாத பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், கூடுதல் பூட்டுகள் பொருத்துதல் மற்றும் சூரிய ஒளி விளக்குகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்கம்பி அடிப்படையிலான எல்இடி விளக்குகளுக்கு மாற்றாக ISLED சூரிய ஒளி விளக்குகளைப் பயன்படுத்துவதோடு, கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV), கூடுதல் ஒளிவெள்ள விளக்குகள் மற்றும் முள்வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இழப்புகள் TNB நிறுவனத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை; சிலாங்கூர் நீர்ப்பாசன- வடிகால் துறையின் (JPS) பம்ப் நீர் இறைக்கும் நிலையங்கள் மற்றும் மதகுகளில் 2023 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 38 மின்கம்பி மற்றும் உபகரணத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனால் சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், பொதுப்பணித் துறையும் மின்கம்பி திருட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலாங்கூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் பதிவாகும் ஒவ்வொரு திருட்டுச் சம்பவத்திற்கும் மாதம் ஒன்றுக்கு 50,000 முதல் 100,000 ரிங்கிட் வரை இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் இஸ்ஹாம் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.