டிஎன்பி கேபிளைத் திருட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

4 அக்டோபர் 2026, 9:31 AM
டிஎன்பி கேபிளைத் திருட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஷா ஆலாம், 4 அக்: இன்று காலை காப்பார், ஜாலான் அக்கோப் பகுதியில் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திற்குச் சொந்தமான கேபிளைத் திருட முயன்றபோது, மின்சாரம் தாக்கி 40 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட நபர் அந்த கேபிளோடு ஒட்டிய நிலையில் மீட்கப்பட்டதாக காப்பார் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ரம்சே எம்போல் தெரிவித்தார்.

மேலும், சம்பவ இடத்தில் கேபிள்களை வெட்டும் கருவிகள், பூட்டு மற்றும் அவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீஸ் கண்டெடுத்தது.

"இன்று காலை 10 மணியளவில் இச்சம்பவம் குறித்து போலிசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கேபிளைத் திருடும் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தபோது, அந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

அவர் கண்டெடுக்கப்பட்டபோது, அவரின் உடலும் கைகளும் இன்னும் டிஎன்பி கேபிளோடு ஒட்டிய நிலையில் இருந்தன," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக யுஐடிஎம் புஞ்சாக் ஆலாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.