ஷா ஆலாம், நவ.15 – தஞ்சோங் செப்பாட் சட்டமன்றத் தொகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 100 ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு, தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஏற்பாட்டில் நடைபெற்ற 'Program Ceria Ke Sekolah' திட்டத்தின் மூலம் கல்வி உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
TNB நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, 2027-ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி முன்னேற்பாடுகளில் B40 மற்றும் ஏழ்மை குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தஞ்சோங் செப்பாட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
கிராமத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் அடையாளம் காணப்பட்ட மலாய், சீனர், இந்தியர் மற்றும் பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கம்போங் குண்டாங்கில் உள்ள ஸ்ரீ குண்டாங் மக்கள் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், TNB சிலாங்கூர் வணிகப் பிரிவின் பொது மேலாளர் மஹாமட் ஃபரிசான் மஹாமட் உட்பட பல உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தகுதியான பயனாளிகளை அடையாளம் காண்பதற்கும், இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் போர்ஹான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்த உதவிகள் 2027-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களின் குடும்பங்களுக்குப் பெரும் ஆதரவாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







