ஷா ஆலம், செப். 7: இன்று ஷா ஆலாம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) தெரிவித்துள்ளது.
TNB CareLine தனது முகநூல் பதிவில், மின்சார விநியோகத்தை மீண்டும் வழக்கமான நிலைமைக்கு கொண்டுவருவதற்கான பழுதுபார்ப்புப் பணிகளில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பொறுமைக்கு நன்றி தெரிவிப்பதுடன், இதனால் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு வருந்துவதாக TNB CareLine தெரிவித்துள்ளது.
எனினும், மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அல்லது குறிப்பிட்ட இடங்கள் தொடர்பான விவரங்களை TNB வெளியிடவில்லை.
இன்று ஷா ஆலாம் பகுதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பாக TNB CareLine-க்கு நூற்றுக்கணக்கான புகார்கள் கிடைத்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ள நேரத்தில் மின்சாதனங்களைக் கையாளும்போது பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் TNB நினைவூட்டியது.







