டிஎன்பி மீட்டர் வாசிக்க சென்றவருக்கு பல் உடைந்தது; இருவர் கைது

18 செப்டெம்பர் 2026, 4:12 PM
டிஎன்பி மீட்டர் வாசிக்க சென்றவருக்கு பல் உடைந்தது; இருவர் கைது

ஷா ஆலாம், செப் 19 : நேற்று செராஸ், தாமான் புக்கிட் செகார் பகுதியில் டிஎன்பி (TNB) ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம் தொடர்பில் இரு உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

நேற்று மதியம் 1.01 மணியளவில், காஜாங் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீஸ் குழுவினர், செராஸ் பத்து 9 பகுதியில் 28 மற்றும் 35 வயதுடைய இரு நபர்களைக் கைது செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.

அவ்விரு நபர்களுக்கும் ஏற்கனவே குற்றப் பின்னணி பதிவுகள் இருப்பதாக அவர் கூறினார்.

"புகார்தாரரை காயப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஆதாரப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை 4.05 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்குப் புகார் வந்ததாக நாஸ்ரோன் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் காலை 10.40 மணியளவில் பாதிக்கப்பட்ட ஊழியர் மின்சார மீட்டர் அளவைப் படிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

புகார்தாரர் தனது சக ஊழியரைப் பார்த்து அவரது பெயரைச் கூப்பிட்டு அழைத்ததாகவும், அப்போது சத்தம் போட்டதாகக் கூறி இரு நபர்கள் அவரிடம் கோபப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழல் இரு தரப்பினருக்கும் இடையே தவறான புரிதலையும் சண்டையையும் ஏற்படுத்தியது.

இதில் பாதிக்கப்பட்ட ஊழியரின் தலை, முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதுடன், அவரது பல்லும் ஒன்று உடைந்தது.

பாதிக்கப்பட்டவர் பின்னர் சான்செலர் துங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையில் (HCTM) சிகிச்சை பெற்றார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதேனும் இரு தண்டனைகள் விதிக்க முடியும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.