ஹிஜ்ரா சிலாங்கூர்: 1,507 தொழில்முனைவோருக்கு RM13.84 மில்லியன் நிதியுதவி

17 நவம்பர் 2026, 8:29 AM
ஹிஜ்ரா சிலாங்கூர்: 1,507 தொழில்முனைவோருக்கு RM13.84 மில்லியன் நிதியுதவி
ஹிஜ்ரா சிலாங்கூர்: 1,507 தொழில்முனைவோருக்கு RM13.84 மில்லியன் நிதியுதவி

ஷா ஆலாம், நவ.17: சிலாங்கூர் ஹிஜ்ரா அறக்கட்டளை (Hijrah Selangor) செயல்படுத்திய `Dana Pantas` மற்றும் `Dana Niaga Tani` ஆகிய வட்டி இல்லாத நிதியுதவித் திட்டங்களின் மூலம் 1,507 தொழில்முனைவோருக்கு RM13.84 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26 முதல் அக்டோபர் 31 வரை வழங்கப்பட்ட இந்நிதியுதவி, RM15.4 மில்லியன் ஒதுக்கீட்டில் 90 விழுக்காட்டை எட்டியுள்ளதாகத் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

இத்திட்டங்களின் கீழ் தகுதிபெற்ற விண்ணப்பங்களில் 64 விழுக்காட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுடன், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களுக்கு 48 மணி நேரத்திற்குள் ஒப்புதல் வழங்கப்படுகிறது.

எனினும், மோசமான கடன் பதிவு, சிலாங்கூரில் வாக்காளராகப் பதிவு செய்யாதது மற்றும் திவால் நிலை போன்ற காரணங்களால் 841 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Dana Pantas திட்டத்தின் மூலம் அனைத்து வணிகத் துறைகளிலும் ஈடுபடும் தொழில்முனைவோர் RM10,000 வரை நிதியுதவி பெறலாம். அதேவேளையில், Dana Niaga Tani உதவி விவசாயத் துறையின் தொடக்கநிலை மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுகிறது.

இவ்விரு திட்டங்களுக்கும் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், Platform Selangor (PLATS) உடனான ஒத்துழைப்பின் கீழ் செயல்படுத்தப்படும் PLATS Biaya திட்டத்தின் மூலம் 2024-ஆம் ஆண்டு முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை 257 தொழில்முனைவோருக்கு RM770,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வட்டி அல்லது இலாப விகிதமின்றி RM3,000 வரை நிதியுதவி பெற முடியும்.

ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாரிசன் ஹாசன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தத் தகவல்களை நஜ்வான் வெளியிட்டார்.

இந்நிதியுதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட மலேசியக் குடிமக்களாகவும், சிலாங்கூரில் வசிப்பவர்களாகவும், அங்கு வாக்காளர்களாகப் பதிவு செய்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

மேலும், Dana Pantas திட்டத்திற்கு குறைந்தது ஓராண்டு காலமாகச் செயல்படும் வணிகங்களும், Dana Niaga Tani திட்டத்திற்கு குறைந்தது ஆறு மாதங்களாகச் செயல்படும் விவசாயத் தொழில்களும் தகுதி பெறுகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.