சிலாங்கூர் தொழில்முனைவோருக்கு 48 மணி நேரத்திற்குள் RM10,000 வரை நிதியுதவி

18 செப்டெம்பர் 2026, 3:54 AM
சிலாங்கூர் தொழில்முனைவோருக்கு 48 மணி நேரத்திற்குள் RM10,000 வரை நிதியுதவி

ஷா ஆலம், செப்.18: சிலாங்கூரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர், 48 மணி நேரத்திற்குள் முழுமையான ஒப்புதலைப் பெறக்கூடிய ‘Dana Pantas’ மற்றும் ‘Dana Niaga Tani’ ஆகிய நிதித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சிலாங்கூர் ஹிஜ்ரா அறக்கட்டளை (Yayasan Hijrah Selangor), தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிதித் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை ‘DANA PLUS’ செயலி வழியாக இணையத்தில் மேற்கொள்ளலாம்.

இரு திட்டங்களின் கீழும் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரிங்கிட் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதிக்கு லாப விகிதம் விதிக்கப்படாது என்பதுடன், திருப்பிச் செலுத்துவதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

‘Dana Pantas’ திட்டம் பதிவு செய்யப்பட்டு, குறைந்தது ஓராண்டாக செயல்பட்டு வரும் அனைத்து வகையான வணிகத் துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கும் திறக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ‘Dana Niaga Tani’ திட்டம் வேளாண்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்காக பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வணிகங்கள் குறைந்தது ஆறு மாதங்களாக செயல்பட்டு இருக்க வேண்டும்.

இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மலேசியக் குடிமக்களாகவும், 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் சிலாங்கூர் வாக்காளர்களாகப் பதிவுசெய்திருப்பதுடன், நிரந்தரமாக அங்கு வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.

புதிய தொழில்முனைவோரும் இந்தத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் PLATS தளத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த இரண்டு நிதித் திட்டங்களும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ‘Selangor Fasa 2’ தொகுப்பின் கீழ் செயல்படுத்தப்படும் முயற்சிகளாகும்.

இதற்காக மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சிலாங்கூரில் சுமார் 2,000 தொழில்முனைவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விரிவான தகவல்களை ‘DANA PLUS’ செயலி அல்லது Yayasan Hijrah Selangor-ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.