கோலா லங்காட்டில் 1,614 டெங்கி சம்பவங்கள் பதிவு; ஒருவர் உயிரிழப்பு

17 நவம்பர் 2026, 3:45 AM
கோலா லங்காட்டில் 1,614 டெங்கி சம்பவங்கள் பதிவு; ஒருவர் உயிரிழப்பு
கோலா லங்காட்டில் 1,614 டெங்கி சம்பவங்கள் பதிவு; ஒருவர் உயிரிழப்பு

ஷா ஆலாம், நவ. 17: சிலாங்கூரின் கோலா லங்காட் மாவட்டத்தில் இவ்வாண்டு நவம்பர் 15-ஆம் தேதி வரையில் மொத்தம் 1,614 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதார அலுவலகம் தெரிவித்தது.

45-ஆவது தொற்றுநோயியல் வாரத்திற்கான (ME 45) அறிக்கையின்படி, பந்திங், தாமான் ஸ்ரீ புத்ரா பகுதியில் உள்ள ஜாலான் ஜெலாவாட் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 19 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி டெங்கி அபாயம் அதிகமுள்ள இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், கோலா லங்காட் மாவட்டத்தில் நான்கு பகுதிகள் டெங்கி பரவல் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஜெட்டி ஸ்ரீ தாமாவில் மூன்று சம்பவங்களும், தாமான் யாயாசான், லாமான் அஸ்பிராசி மற்றும் தாமான் இண்டா ஜெயா ஆகிய பகுதிகளில் தலா இரண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 34,820 டெங்கி பாதிப்பு சம்பவங்களும் 33 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. தேசிய அளவில் மொத்தம் 83,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கி பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் வாரத்திற்கு குறைந்தது 10 நிமிடங்களாவது தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைச் சோதனையிட வேண்டும்.

மேலும், தண்ணீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டெங்கி தடுப்பு நடவடிக்கைகளில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மாவட்ட சுகாதார அலுவலகம், மேல் தகவல்களுக்கு 03-3187 2355 என்ற எண்ணிn மூலம் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.