தாயைக் கழுத்து நெரித்துக் கொன்ற மகனுக்கு தடுப்புக் காவல்

14 நவம்பர் 2026, 8:25 AM
தாயைக் கழுத்து நெரித்துக் கொன்ற மகனுக்கு தடுப்புக் காவல்

ஷா ஆலாம், நவ.14: கோலா லங்காட், பந்திங் பகுதியில் சொந்தத் தாயைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 20 வயது ஆடவர், விசாரணைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையில், மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) எனப்படும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோலா லங்காட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் முகமட் அக்மல்ரிஸால் ராட்ஸி தெரிவித்தார்.

எனினும், இக்கொலைக்கான உண்மையான காரணம் அல்லது பின்னணி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில், 50 வயதைக் கடந்த உள்ளூர் பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

பின்னர், உயிரிழந்த பெண்ணின் மகனான சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்ததாக முகமட் அக்மல்ரிஸால் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.