பத்து பஹாட் கடற்பகுதியில் 3.2 ரிக்டர் நிலநடுக்கம்

17 நவம்பர் 2026, 3:01 AM
பத்து பஹாட் கடற்பகுதியில் 3.2 ரிக்டர் நிலநடுக்கம்
பத்து பஹாட் கடற்பகுதியில் 3.2 ரிக்டர் நிலநடுக்கம்

ஷா ஆலாம், நவ.17: ஜோகூர் பத்து பஹாட் கடற்பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகள் பகுதியில் அதிகாலை 5.11 மணியளவில் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியா (MetMalaysia) வெளியிட்டுள்ள தகவலின்படி, பத்து பஹாட் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம், பத்து பஹாட் நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

இதற்கிடையில், இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகள் பகுதியில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கம், அம்போன் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 468 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 76 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், இரு நிலநடுக்கங்களையும் தொடர்ந்து மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என மெட்மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.