ஷா ஆலம், செப். 12: இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.23 மணியளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து வடக்கே சுமார் 117 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக METMalaysia தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என METMalaysia தெளிவுபடுத்தியது.
இதனால் மலேசியக் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி தொடர்பான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.







