இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் நிலநடுக்கம்; மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

29 அக்டோபர் 2026, 2:56 AM
இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் நிலநடுக்கம்; மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

ஷா ஆலாம், அக்.29 – இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்குச் சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தெரிவித்தது.

இன்று காலை 6.06 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் அம்போன் நகருக்குத் தென்கிழக்கே சுமார் 403 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

மேலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 157 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக மெட்மலேசியா குறிப்பிட்டது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.