கோலாலம்பூர், செப்.26: இன்று அதிகாலை 5.32 மணியளவில் சபாவின் கினபத்தாங்கான் மாவட்டத்தில் உள்ள குவாமுட் பகுதியில் 3.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சபாவின் தோங்கோட் நகரிலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தென்மேற்குப் பகுதியில் உணரப்பட்டதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கம் மலேசியாவுக்கு எந்தவிதமான சுனாமி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.
நில அதிர்வு மண்டலங்களுக்கு அருகில் சபா அமைந்துள்ளதால், அங்கு அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதுவரை பதிவாகியுள்ள பெரும்பாலான நிலநடுக்கங்கள் குறைந்த அளவிலான அதிர்வுகளாகவே இருப்பதுடன், கடுமையான சேதங்களை ஏற்படுத்தாதவையாக உள்ளன.







