நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து டத்தோ இஸ்மாயில் லாசிம் விலகல்

17 நவம்பர் 2026, 1:45 AM
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து டத்தோ இஸ்மாயில் லாசிம் விலகல்

சிரம்பான், நவ.17: நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து டத்தோ இஸ்மாயில் லாசிம் விலகியுள்ளதாக தேசிய முன்னணியின் (BN) பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

இஸ்மாயில் லாசிமின் பதவி விலகல் கடிதம் நேற்று மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் நகல் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் சஹிட் ஹமிடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதிய மந்திரி பெசார் பதவிக்கான வேட்பாளரை அஹ்மட் சஹிட் பரிந்துரைத்து, மாநில ஆட்சியாளரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என சம்ரி தெரிவித்தார்.

இந்தத் தலைமைத்துவ மாற்றம் மாநில அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு மற்றும் மாநில ஆட்சியாளரின் ஒப்புதலுடன் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்மாயில் லாசிம் பதவி வகித்த காலத்தில் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்த தேசிய முன்னணி, இந்த மாற்றத்தின் மூலம் மாநில அரசியல் நிலைத்தன்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சுமுகமாகத் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தது.

மேலும், புதிய மந்திரி பெசார் நியமனம் மற்றும் தலைமைத்துவ மாற்றம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் சம்ரி உறுதியளித்தார்.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி 18 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் (PN) ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.

இரு கூட்டணிகளும் இணைந்து மாநில அரசை அமைப்பதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.