சிரம்பான், ஆகஸ்ட் 10: நீலாய் சட்டமன்ற உறுப்பினரும், தேசிய DAP உதவித் தலைவருமான ஜே. அருள் குமார், நெகிரி செம்பிலான் DAP-இன் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜே. அருள் குமாரை மாநிலத் தலைவராக நியமிக்கும் முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சுமார் 22 ஆண்டுகளாக மாநிலத் தலைவர் பதவியை வகித்து வந்த அந்தோணி லோக், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைவராக அருள் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியில் ஒருவரின் இனப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு பதவிகள் வழங்கப்படுவதில்லை; மாறாக அவர்களின் தகுதி, திறன் மற்றும் தலைமைத்துவ ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யப்படுவதாகவும் லோக் கூறினார்.
புதிய மாநில DAP குழுவின் மீது தாம் முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.





