செனாய்-டெசாரு விரைவுச்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

16 நவம்பர் 2026, 3:45 AM
செனாய்-டெசாரு விரைவுச்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

ஜோகூர் பாரு, நவ.16 – செனாய்-டெசாரு விரைவுச்சாலையில் (SDE) இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.

டெசாரு நோக்கிச் செல்லும் வழித்தடத்தின் 52.5-ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அதிகாலை 1.49 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அதிகாலை 2.06 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாகவும் பெனாவார் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கைத் தலைவர் முகமட் ஹஸ்மி சுல்கிஃப்லி தெரிவித்தார்.

விபத்தில் X70 வாகனத்தில் பயணித்த 58 வயது ஆடவரும், புரோட்டோன் பெர்சோனா காரில் பயணித்த 26 வயது பெண்ணும் வாகனங்களுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக் கருவிகளின் உதவியுடன் மீட்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

அதேவேளையில், X70 வாகனத்தில் பயணித்த 51 மற்றும் 47 வயதுடைய இரு பெண்கள் காயமடைந்தனர். டொயோட்டா உன்சர் வாகனத்தில் பயணித்த ஆடவர் காயமின்றி உயிர் தப்பினார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. காயமடைந்த இரு பெண்களுக்கும் சம்பவ இடத்தில் ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு (HSI) கொண்டு செல்லப்பட்டனர்.

எட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் ஈடுபட்ட மீட்புப் பணி அதிகாலை 3.38 மணிக்கு நிறைவடைந்ததாக முகமட் ஹஸ்மி தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.