ஸ்பெயின் ரயில் விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: வெளியுறவு அமைச்சு உறுதி

29 அக்டோபர் 2026, 1:14 PM
ஸ்பெயின் ரயில் விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: வெளியுறவு அமைச்சு உறுதி

கோலாலம்பூர், அக்.29: ஸ்பெயினில் புதன்கிழமை நிகழ்ந்த பயங்கர அதிவேக ரயில் விபத்தில் மலேசியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஸ்பெயினில் உள்ள மலேசியத் தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு, விபத்தில் மலேசியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த உதவிய ஸ்பெயின் அதிகாரிகளுக்கு அமைச்சு நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.

இதற்கிடையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்பெயின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் மலேசியா தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.

ஊடகச் செய்திகளின்படி, புதன்கிழமை ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில்களின் பாதுகாப்பு அமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஸ்பெயினில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான மேல் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.