நியூட்ரிசெல் 2027: 100,000 மாணவர்களுக்கு வாரத்தில் இருமுறை இலவச உணவு வழங்கப்படும்

16 நவம்பர் 2026, 1:50 AM
நியூட்ரிசெல் 2027: 100,000 மாணவர்களுக்கு வாரத்தில் இருமுறை இலவச உணவு வழங்கப்படும்
நியூட்ரிசெல் 2027: 100,000 மாணவர்களுக்கு வாரத்தில் இருமுறை இலவச உணவு வழங்கப்படும்

ஷா ஆலாம், நவ.16 – சிலாங்கூர் முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், இலவச உணவு வழங்கும் நியூட்ரிசெல் (NutriSEL) திட்டம் 2027-ஆம் ஆண்டிலும் தொடரும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாணவர்களிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, வாரத்திற்கு இருமுறை இலவச காலை அல்லது மதிய உணவு வழங்கும் இத்திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இத்திட்டத்திற்காக 24 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இது ஊராட்சி மன்றங்கள் (PBT) மற்றும் மாநில அரசின் துணை நிறுவனங்களின் நிதியின் மூலம் வழங்கப்படும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே இத்திட்டத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, இதனை அடுத்த ஆண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அவர் இதனை அறிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் டிசம்பர் 3-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 962 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

14.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்ட இத்திட்டத்தில் மாத வருமானம் 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவான B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மாணவர்களின் ஊட்டச்சத்து ஆதரவை விரிவுபடுத்தும் நோக்கில், கடந்த அக்டோபர் மாத மத்தியில் மெகா நியூட்ரிசெல் (Mega NutriSEL) திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.