NutriSel திட்டம் அடுத்தாண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

13 நவம்பர் 2026, 10:46 AM
NutriSel திட்டம் அடுத்தாண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூரில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களுக்கு வாரம் இருமுறை இலவச காலை அல்லது மதிய உணவு வழங்கும் NutriSel ஊட்டச்சத்துத் திட்டம், அடுத்தாண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது.

இன்று 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றும்போது மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதனை தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்காக RM24 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இதனைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பதுடன், ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.