நாளை முதல் சிலாங்கூரில் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்: மாநிலக் கல்வித் துறை அறிவிப்பு

3 நவம்பர் 2026, 8:16 AM
நாளை முதல் சிலாங்கூரில் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்: மாநிலக் கல்வித் துறை அறிவிப்பு

ஷா ஆலாம், நவ.3: சிலாங்கூரில் புகைமூட்டம் குறைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை நவம்பர் 4-ஆம் தேதி முதல் வழக்கம்போல் செயல்படும் என சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை (JPN) அறிவித்துள்ளது.

புகைமூட்டம் தொடர்பான நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 4-ஆம் தேதி புதன்கிழமை முதல் சிலாங்கூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வழக்கமான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

புகைமூட்டத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருமாறு கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையில், தங்களது பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவ்வாறு செய்யும்போது சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் காற்றின் தரம் தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், அதிகாரிகள் வெளியிடும் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகைமூட்டம் நிலவரத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அத்தகவல்கள் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு தளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.