கோலாலம்பூர், சிலாங்கூரில் மாலை மணி 6 வரை கன மழை எச்சரிக்கை

9 நவம்பர் 2026, 8:48 AM
கோலாலம்பூர், சிலாங்கூரில் மாலை மணி 6 வரை கன மழை எச்சரிக்கை

ஷா ஆலாம், நவ 9 : கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட மலேசியாவின் முக்கிய மாநிலங்களுக்கு இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலாங்கூர் மாநிலம் மட்டுமின்றி கோலாலம்பூர், புத்ராஜெயா, பினாங்கு, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சரவாக், சபா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளிலும் இதேபோன்ற மோசமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடிய, ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழைப் பொழிவு மற்றும் இடியுடன் கூடிய சூழல் ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் தென்படும் போது மட்டுமே இந்த இடி மின்னல் எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாக மெட் மலேசியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளது.

இந்த எச்சரிக்கை ஒவ்வொரு முறை வெளியிடப்படும் போது அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.

பொதுமக்கள் அனைவரும் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ மற்றும் துல்லியமான வானிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.met.gov.my என்ற இணையதளம், மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது 'myCuaca' செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மலேசிய வானிலை ஆய்வு மையம்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.