சிலாங்கூரில் இன்று மாலை வரை 1,511 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

14 நவம்பர் 2026, 11:45 AM
சிலாங்கூரில் இன்று மாலை வரை 1,511 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், நவ.14: கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று மாலை 4 மணி நிலவரப்படி 1,511-ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,498 பேர் மட்டுமே நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 13 பேரால் அதிகரித்துள்ளது.

சமூக நலத்துறையின் இன்ஃபோபென்சானா (InfoBencana) இணையவழித் தகவல் தளத்தின்படி, கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் மொத்தம் 7 தற்காலிக நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இன்று காலை 265-ஆக இருந்த எண்ணிக்கை பிற்பகலில் 227-ஆகக் குறைந்துள்ளதாக மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுவின் (JPBN) செயலகம் தெரிவித்தது.

மேலும், தெலுக் இந்தான் நகராட்சி மன்றத்தின் (MPTI) லங்காப் ஓய்வு மண்டபத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக நிவாரண மையம், இன்று பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.