ஷா ஆலாம், நவ.12 – சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இன்று காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 1,179 பேர் 9 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக நலத்துறையின் (JKM) InfoBencana இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, கோம்பாக், பெட்டாலிங் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பேராக் மாநிலத்தில் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 தற்காலிக நிவாரண மையங்களில் 317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சரவாக்கில், மிரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தற்காலிக நிவாரண மையத்தில் ஏழு பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
இதன் மூலம் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,503ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் 482 பெண்கள், 459 ஆண்கள், 293 சிறுவர்கள், 227 சிறுமிகள், 29 ஆண் குழந்தைகள் மற்றும் 13 பெண் குழந்தைகள் ஆவர்.







