சிலாங்கூரில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு; 1,498 பேர் 7 நிவாரண மையங்களில் தஞ்சம்

14 நவம்பர் 2026, 2:50 AM
சிலாங்கூரில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு; 1,498 பேர் 7 நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், நவ.14: கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 402 குடும்பங்களைச் சேர்ந்த 1,498 பேர் ஏழு தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,373 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 125 பேர் அதிகரித்துள்ளதாகச் சமூக நலத்துறையின் (JKM) InfoBencana தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஏழு நிவாரண மையங்களில், மஹாங் பாரிட் தேசியப் பள்ளியில் அதிகபட்சமாக 428 பேர் தங்கியுள்ளனர்.

அதேபோன்று, டத்தோ மஹாராஜா லேலா தேசியப் பள்ளியில் 393 பேரும், புக்கிட் குச்சிங் மதப் பள்ளியில் 311 பேரும் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

மேலும், புக்கிட் குச்சிங் தெங்கா பொது மண்டபத்தில் 123 பேரும், KAFA இன்டெக்ராசி ஹிதாயா புக்கிட் செராக்காவில் 122 பேரும் தங்கியுள்ளனர்.

இதனிடையே, SRA பத்து 8 ஈஜோக் நிவாரண மையத்தில் 71 பேரும், டேவான் கொமுனிட்டி பென்யாயாங் தஞ்சோங் சியாமில் 50 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, அங்கு 74 குடும்பங்களைச் சேர்ந்த 265 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நேற்று மாலை 79 குடும்பங்களைச் சேர்ந்த 274 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9 பேர் குறைந்துள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.