சுங்கை லுயிட் திடீர் வெள்ளம்: காணாமல் போன கடைசி நபரைத் தேடும் பணி மீண்டும் தொடக்கம்

14 நவம்பர் 2026, 6:02 AM
சுங்கை லுயிட் திடீர் வெள்ளம்: காணாமல் போன கடைசி நபரைத் தேடும் பணி மீண்டும் தொடக்கம்

கோலாலம்பூர், நவ.14: உலு சிலாங்கூர் பகுதியில் உள்ள சுங்கை பெர்தாக் சுற்றுலாத் தலத்திற்கு அருகிலுள்ள சுங்கை லுயிட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரிடரில் காணாமல் போன கடைசி நபரைத் தேடும் மீட்புப் பணி இன்று காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் இதனைத் தெரிவித்தார்.

காணாமல் போன நபரைத் தேடும் பணியில் மோப்ப நாய்ப் பிரிவான K9 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அடையாளம் காணப்பட்ட C பிரிவுப் பகுதியில் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆற்றின் குறிப்பிட்ட பகுதிகளில் படகுகள் மூலம் நீரின் மேற்பரப்பில் தேடுதல் நடத்தப்படுவதுடன், வான்வழிக் கண்காணிப்புக்காக ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில், இந்தத் திடீர் வெள்ளச் சம்பவத்தில் காணாமல் போனவர்களில் ஏழாவது நபரின் சடலம் நேற்று மாலை 3.40 மணியளவில் C பிரிவுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தப் பேரிடரில் சம்பந்தப்பட்ட எட்டு பேரில் ஏழு பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.