ஷா ஆலாம், அக். 19 – சிலாங்கூரில் கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 7 மணி வரை அமலில் இருக்கும்.
மேலும், கெடா, பேராக், திரங்கானு, பகாங், ஜோகூர், சரவாக், சபா மற்றும் கூட்டரசுப் பிரதேசமான லாபுவான் முழுவதும் இதே வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சீரற்ற வானிலையின்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






