சிலாங்கூரில் P-Hailing ஓட்டுநர்களுக்கு அடுத்தாண்டு முதல் மாதந்தோறும் RM100 நிதியுதவி

13 நவம்பர் 2026, 11:30 AM
சிலாங்கூரில் P-Hailing ஓட்டுநர்களுக்கு அடுத்தாண்டு முதல் மாதந்தோறும் RM100 நிதியுதவி

ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூரில் பிறந்து, முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள P-Hailing (பொருள் விநியோகச் சேவை) ஓட்டுநர்களுக்கு 2027-ஆம் ஆண்டு முழுவதும் மாதந்தோறும் RM100 நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

'Kita Selangor Gig Voucher' எனும் திட்டத்தின் கீழ், மொத்தம் 5,000 ஓட்டுநர்கள் பயன்பெறவுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு பயனாளருக்கும் ஆண்டுக்கு மொத்தம் RM1,200 நிதியுதவி கிடைக்கும்.

P-Hailing ஓட்டுநர்களில் பலர் தற்போதைய வேலைச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ற திறன்களைக் கொண்டிருக்காததால், நிரந்தர வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அமிருடின் குறிப்பிட்டார்.

இதனைக் கருத்தில் கொண்டு, நிதியுதவியுடன் புதிய தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

குறுகிய காலப் பயிற்சிகள் மூலம் மாற்றுத் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டம் Selangor Technical Skills Development Centre (STDC) மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காகப் பயிற்சி செலவுகள் உட்பட மொத்தம் RM10 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.