சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதியுதவி; இரண்டு மாதச் சம்பளம் வழங்கப்படும்

13 நவம்பர் 2026, 9:56 AM
சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதியுதவி; இரண்டு மாதச் சம்பளம் வழங்கப்படும்
சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதியுதவி; இரண்டு மாதச் சம்பளம் வழங்கப்படும்

ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளம் அல்லது படிகளுக்கு இணையான சிறப்பு நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

'BKK Kita Selangor 2026' எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சிறப்பு நிதியுதவி, குறைந்தபட்சம் RM1,000 என்ற அடிப்படையில் வழங்கப்படும். பொதுமக்களுக்கு அரசு சேவைகளைச் சிறப்பாக வழங்குவதில் அரசு ஊழியர்கள் ஆற்றிவரும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் இந்த உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அமிருடின் இதனை அறிவித்தார்.

இதற்கிடையில், மாநில அரசின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இச்சிறப்பு நிதியுதவித் திட்டத்தில் உள்ளடக்கப்படுவார்கள்.

சம்பளத்தை மத்திய அரசாங்கம் வழங்கி வந்தாலும், மாநில நிர்வாகத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட பணியாளர்களுக்கும் இந்த உதவி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

BKK Kita Selangor 2026 திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மொத்தம் RM100.31 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி நடப்பு ஆண்டுக்கான மாநில அரசாங்கத்தின் ஒதுக்கீட்டிலிருந்து பயன்படுத்தப்படும்.

இந்த நிதியுதவி எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி பயனாளர்களுக்கு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.