ஷா ஆலாம், நவ. 6: சிலாங்கூரில் 9 மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மாலை 5.40 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த வானிலை எச்சரிக்கையில், சிலாங்கூரில் சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோம்பாக், உலு சிலாங்கூர், உலு லங்காட், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய 9 மாவட்டங்களும் அடங்கும்.
இதனுடன், கோலாலம்பூர், புத்ராஜெயா, பேராக், கெடா, பகாங், நெகிரி செம்பிலான்,ஜோகூர், பினாங்கு, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வானிலையில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.







