வெள்ளம்: சிலாங்கூரில் 1,180 பேர் 9 நிவாரண மையங்களில் அடைக்கலம்

12 நவம்பர் 2026, 11:00 AM
வெள்ளம்: சிலாங்கூரில் 1,180 பேர் 9 நிவாரண மையங்களில் அடைக்கலம்

ஷா ஆலாம், நவ. 12 – மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 326 குடும்பங்களைச் சேர்ந்த 1,180 பேர் 9 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோம்பாக், பெட்டாலிங் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9 மணி நிலவரப்படி 1,179 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், நிவாரண மையங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.

இதற்கிடையில், பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து, இரண்டு நிவாரண மையங்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 306 பேர் தங்கியுள்ளனர். காலை 317 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 11 பேரால் குறைந்துள்ளது.

மறுபுறம், சரவாக்கில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்து, இரு மாவட்டங்களில் உள்ள 2 நிவாரண மையங்களில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சமூக நலத்துறையின் (JKM) InfoBencana இணையத்தளத் தகவலின்படி, இன்று மாலை 5 மணி நிலவரப்படி சிலாங்கூர், பேராக் மற்றும் சரவாக் ஆகிய மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 13 தற்காலிக நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.