போலீஸ் அதிகாரி மீதான தாக்குதலுக்குப் பிரதமர் அன்வார் கடும் கண்டனம்

12 நவம்பர் 2026, 6:45 AM
போலீஸ் அதிகாரி மீதான தாக்குதலுக்குப் பிரதமர் அன்வார் கடும் கண்டனம்

கோலாலம்பூர், நவ. 12 – கெப்போங், டேசா அமான்பூரி பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர் மீது நடத்தப்பட்ட பாராங்கத்தி தாக்குதலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமலாக்க அதிகாரிகள் மீதான தாக்குதல் உட்பட, அனைத்து வகையான வன்முறைச் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் வலியுறுத்தினார்.

குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் அமலாக்க அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தாக்குதலில் வலது கை மணிக்கட்டை இழந்த 26 வயதுடைய போலீஸ் அதிகாரி தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.

நேற்று மாலை நடைபெற்ற இச்சம்பவத்தில், போலீசாரைத் தாக்கிய சந்தேக நபர், பின்னர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சம்பவத்தின்போது சில தீயணைப்புப் படையினர் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த போலீஸ் அதிகாரி முதலில் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அறுவைச் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.