தீபாவளி பண்டிகை: அமைதி, நல்லிணக்கத்தைப் பேண மலேசியர்களுக்கு அன்வார் வலியுறுத்து

6 நவம்பர் 2026, 1:00 AM
தீபாவளி பண்டிகை: அமைதி, நல்லிணக்கத்தைப் பேண மலேசியர்களுக்கு அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ.6: மலேசியாவின் பல்லின, பல்மத சமூகத்தினரிடையே நிலவி வரும் நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இவ்வாண்டு கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை அனைவரும் கருத வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மலேசிய மக்கள் வெவ்வேறு இன, கலாச்சார மற்றும் சமயப் பின்னணிகளைக் கொண்டிருந்தாலும், அனைவரையும் ஒன்றிணைக்கும் அடிப்படை மனிதநேயப் பண்புகள் பொதுவானவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அன்பு, புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை மற்றும் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பம் ஆகியவையே மக்களிடையே காணப்படும் பொதுவான அம்சங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்புதான் மலேசியாவின் தனித்துவமான அழகாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், அதனை எதிர்காலத் தலைமுறையினருக்காகவும் தொடர்ந்து பாதுகாத்துப் பேண வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தமது இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் நேற்று நடைபெற்ற தீபாவளி மெகா பஜாருக்கு தாம் நேரில் சென்றிருந்த காணொளியையும் பிரதமர் அன்வார் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.